Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

AI-க்கு செக்... ஒன்றிய அரசு போட்ட முக்கிய உத்தரவு!...

Advertiesment
ai

Mahendran

, புதன், 11 பிப்ரவரி 2026 (10:33 IST)
சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் AI புகைப்படங்கள் வீடியோக்கள் அதிகமாக கண்களில் படுகிறது. இல்லாத ஒன்றை, நடக்காத ஒன்றைக் கூட நடப்பது போலவும், உண்மையாக இருப்பது போலவும் AI சாத்தியப்படுத்துகிறது.  AI தொடர்பாக பல ஆப்கள் தற்போது வந்துவிட்டன. எனவே பலரும் அதைப் பயன்படுத்தி புகைப்படங்களையும், வீடியோக்களையும் உருவாக்கி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்..

இதனால் எது உண்மை? எது பொய்? என்கிற குழப்பமே பார்வையர்களிடம் ஏற்படுகிறது. ஒருபக்கம் பலரும்  AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களையும், புகைப்படங்களையும் உருவாக்குகிறார்கள். இந்நிலையில்தான் இதையெல்லாம் கட்டுப்படுத்தும் படி ஒன்றிய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி:

சமூகவலைத்தளங்களில் AI  மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம், வீடியோக்களில் தெளிவாக அவை  AI- ல் உருவாக்கப்பட்டவை என்று குறிப்பிட வேண்டும். அரசு அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டால்  AI  டீப்ஃபேக் வீடியோக்களை 3 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீக்க வேண்டும். AI  வாட்டர் மார்க்-ஐ நீக்கவோ, மறைக்கவோ கூடாது..

சட்டவிரோத, பாலியல் சீண்டல், தவறான தகவல் தரும் AI  வீடியோ கண்டெண்டுகளை கண்டறிந்து அதை தடுக்கும் Tool-களை சமூக வலைதள நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும்..

 AI  விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் அல்லது சட்ட நடவடிக்கை குறித்து பயன்பாட்டாளர்களுக்கு Disclaimer கொடுத்து எச்சரிக்க வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலிமையான கூட்டணியுடன் அதிமுக, திமுக.. தனித்து போட்டியிடும் தவெக.. யாருக்கு வெற்றி?