Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப் -ல் க்ரூப் காலுக்கு ஷார்ட் கட் வசதி ...

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (13:09 IST)
வாட்ஸ் அப் ஆண்டிராய்ட் இயங்குதளத்தில் பீட்டா செயலியில் கிரூப் கால் செய்வதற்கான ஷார்ட்கட் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் கால் , வீடியோ கால் மேற்கொள்ளும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் வாட்ஸ் அப் க்ரூப் கால் வசதி சென்ற ஆண்டு செப்டம்பரில் சேர்க்கப்பட்டது.
 
இதில் வீடியோ கால் மேற்கொள்வது சிக்கல் நிறைந்த ஒன்றாக இருந்தது. பின்னர் எளிமையாக்கப்பட்டது. வாட்ஸ் அப் ஆண்டிராய்டு பீட்டா 2.19.9 செயலிலில் வீடியோ கால் செய்ய பட்டன் வழங்கப்பட்டுள்ளது. க்ரூப் சாட் செய்யும் போது ஒற்றை கிளிக் மூலம் வீடியோ கால் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.நண்பர்களுக்கு ஒரே சமயத்தில் வீடியோ கால் செய்ய காண்டாக்டளில் உள்ள ஸ்லைடிங்கை பயன்படுத்தலாம். புதிய அப்டேட் முலம் க்ரூப் கால் ஷட்கட் மட்டுமன்றி செயலியில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
ஐஓஎஸ் இயங்கு தளத்தில் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சில குறைபாடுகள் இருப்பதாக பயனாளர்கள் கூறினார்கள். அது பற்றி நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments