Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபோன் 16 விலை ரூ. 20,000 வரை நேரடி தள்ளுபடி.. எந்த மறைமுக நிபந்தனையும் இல்லை...

Advertiesment
iphone 17
ஃப்ளிப்கார்ட் செயலியில் ஐபோன் 16  ஸ்மார்ட்போனிற்கு எவ்வித நிபந்தனையுமின்றி அதிரடியாக ரூ. 20,000 வரை நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அறிமுகத்தின் போது ரூ. 89,900-க்கு விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 16, தற்போது ஃப்ளிப்கார்ட் செயலியில் ரூ. 69,900 என்ற சலுகை விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர, ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ்  மற்றும் எஸ்பிஐ  கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது கூடுதலாக ரூ. 3,495 வரை கூடுதல் வங்கித் தள்ளுபடியும் பெற முடியும்.
 
ஆப்பிளின் ஏ18  சிப்செட் மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட இந்த போன், அதிவேகச் செயல்பாட்டையும் சிறந்த மல்டிடாஸ்கிங் மற்றும் கேமிங் அனுபவத்தையும் வழங்குகிறது. 'ஆப்பிள் இன்டலிஜென்ஸ்'   தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ள இதன் கேமராக்கள், தெளிவான புகைப்படங்கள் மற்றும் 4K வீடியோக்களைப் பதிவு செய்ய உதவுகின்றன.
 
30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் ஆகும் வேகமான பேட்டரி வசதி இதில் உள்ளது. திரையில் 60Hz புதுப்பிப்பு வீதம்   மட்டுமே உள்ளது சிறிய குறையாக இருந்தாலும், சக்திவாய்ந்த A18 பிராசஸர் மற்றும் நவீன வடிவமைப்பு காரணமாகப் பழைய ஐபோன்களில் இருந்து அப் கிரேடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்தச் சலுகை ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வருவாய் இழப்பு!.. வெற்றிப் பயண திட்டத்தால் காத்து வாங்கும் தனியார் பேருந்துகள்!..