Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஏர்டெல், ஜியோ, வோடபோன் விலை உயர்வு... BSNL பக்கம் திரும்பும் பயனர்கள்!!

ஏர்டெல், ஜியோ, வோடபோன் விலை உயர்வு... BSNL பக்கம் திரும்பும் பயனர்கள்!!
, திங்கள், 29 நவம்பர் 2021 (10:21 IST)
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் மீது மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 

 
இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் சேவைகளில் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் நெட்வொர்க்குகளாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களது ரீசார்ஜ் ப்ளான்களை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தின.
 
இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதை தொடர்ந்து தற்போது ஜியோவும் தனது ரீசார்ஜ் கட்டணங்களை 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அடுத்தடுத்து மூன்று நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இதுதொடர்பாக ட்விட்டரில் #BoycottJioVodaAirtel என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனோடு #BSNL என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும் பலர் BSNL சிம் வாங்கிவிட்டதாக பதிவிட்டும் வருகின்றனர். அடுத்தவரையும் BSNL சிம் வாங்கிக்கொள்ளுமாறும் பதிவிட்டு வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளையுடன் முடிவடையும் ஊரடங்கு: இன்று முதல்வர் ஆலோசனை!