Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

Playstation 5 pro

Prasanth Karthick

, திங்கள், 11 நவம்பர் 2024 (14:43 IST)

சோனி நிறுவனத்தின் வீடியோ கேம் ப்ளேயரான சோனி ப்ளே ஸ்டேஷனின் புதிய வெர்சன் இந்தியாவில் அறிமுகமாவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

உலகம் முழுவதும் உள்ள கேமிங் பிரியர்களிடையே Console Gaming, PC Gaming, Mobile Gaming என பல வகைபாடுகள் உள்ளன. அதில் Console Gaming-ல் பிரபலமாக உள்ள ஒரு கேமிங் கன்சோல்தான் சோனியின் Play Station. சோனி ப்ளே ஸ்டேஷன் சமீபத்தில் தனது புதிய Play Station 5 Pro மாடலை உலகளாவிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

ஆனால் அதை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய Play Station 5 Pro அதிவேக கேமிங் அனுபவத்திற்காக வைஃபை 7 பேண்ட் கனெக்டிவிட்டி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வைஃபை பேண்ட்களில் அனுமதிக்கப்பட்ட அளவு 6 வரை மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனால் Play Station 5 Pro இந்தியாவில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது கேமிங் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!