இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது ரீசார்ஜ் ப்ளான்களுடன் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடும் வழங்குகிறது.
இந்தியாவில் உள்ள முன்னணி டெலிகாம் சேவை நிறுவனங்களில் ஏர்டெல் நிறுவனம் முக்கியமான நிறுவனமாக உள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுடன் இலவச ஆன்லைன் கோர்ஸ், விங்க் ம்யூசிக் ப்ரீமியம், ஏர்டெல் டிவி சேவை உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது தனது ரீசார்ஜ் திட்டங்களோடு வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையிலான விபத்து காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் ரீசார்ஜ் பேக்கில் ரூ.239, ரூ.399 மற்றும் ரூ.999 ஆகிய மூன்று ரீசார்ஜ் திட்டங்களோடு இந்த காப்பீடு வசதி கிடைக்கும்.
இந்த காப்பீட்டை ஐசிஐசிஐ லம்பார்டு உடன் இணைந்து ஏர்டெல் வழங்குகிறது. காப்பீட்டின் படி, காப்பீடு காலத்திற்குள் வாடிக்கையாளர் உயிரிழக்க நேர்ந்தால் ரூ.1 லட்சம் இழப்பீடும், 30 நாட்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டால் ரூ.25 ஆயிரம் மருத்துவ உதவித் தொகையாக வழங்கப்படும்.
இந்த காப்பீடு பயன்களை பெற ரீசார்ஜ் செய்ய 48 மணி நேரத்திற்குள் ஏர்டெல் வலைதளம் சென்று லாக் இன் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K