Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேமரா பேனலில் ஆரா லைட், அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் Vivo V30 Pro – விலை எவ்வளவு தெரியுமா?

Prasanth Karthick
வியாழன், 7 மார்ச் 2024 (13:49 IST)
விவோ நிறுவனத்தில் புதிய மாடலான Vivo V30 மற்றும் Vivo V30 Pro ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் வெளியாகியுள்ளது.



இந்தியாவில் பல சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட்டு வரும் விவோ நிறுவனம் தனது புதிய Vivo V30 மற்றும் Vivo V30 Pro ஸ்மார்ட்போன்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்களில் கேமரா பேனலை சுற்றி எல்.இ.டி ஆரா லைட் செட் செய்யப்பட்டுள்ளது. மஞ்சள் முதல் வெள்ளை வரையிலான கலர் வேரியண்டில் ஒளிரும் இந்த லைட் இரவு நேரங்களில் குறைவான ஒளியிலும் சிறப்பாக வீடியோ, ஃபோட்டோ எடுக்க பயன்படும். சமீபமாக யூட்யூப் கிரியேட்டர்கள் இதற்காக தனி லைட்டுகள் வாங்கும் நிலையில் அந்த நிலையை போக்கியுள்ளது விவோவின் இந்த புதிய அம்சம்.

மேலும் இந்த Vivo V30 Pro மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள Zeiss தொழில்நுட்ப கேமரா படங்களை துல்லியமாகவும், கலர்ஃபுல்லாகவும் படம் பிடிக்கக் கூடியது

Vivo V30 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:


  • 6.78 இன்ச் அமோலெட் மல்டி டச் டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 7 Gen 3
  • அட்ரினோ 720 ஜிபியு
  • ஆண்ட்ராய்டு 14, ஃபன் டச் ஓஎஸ் 14
  • 8 ஜிபி / 12 ஜிபி ரேம்
  • 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 50 MP + 50 MP + 2 MP ZEISS ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா வித் ஆரா லைட்
  • 50 MP முன்பக்க செல்ஃபி கேமரா’
  • டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார்
  • 5000 mAh பேட்டரி, 80 W பாஸ்ட் சார்ஜிங்

இந்த Vivo V30 மாடலின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.33,999 ஆகவும், 8 ஜிபி + 256ஜிபி வேரியண்ட், 35,999 ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ரூ.37,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த Vivo V30 மாடல் அந்தமான் ப்ளூ, பீக்காக் க்ரீன், க்ளாசிக் ப்ளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

Vivo V30 Pro ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:


  • 6.78 இன்ச் அமோலெட் மல்டி டச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே
  • மீடியாடெக் டைமென்சிட்டி 8200 சிப்செட்
  • மாலி G610 MC6 ஜிபியு
  • ஆண்ட்ராய்டு 14, ஃபன் டச் ஓஎஸ் 14
  • 8 ஜிபி / 12 ஜிபி ரேம்
  • 256 ஜிபி / 512 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • 50 MP + 50 MP + 50 MP ZEISS ப்ரைமரி ட்ரிப்பிள் கேமரா வித் ஆரா லைட்
  • 50 MP முன்பக்க செல்பி கேமரா
  • டிஸ்ப்ளே ஃபிங்கர்ப்ரிண்ட் சென்சார்
  • 5000 mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங்
 
இந்த Vivo V30 Pro ஸ்மார்ட்போன் ப்ளாக், வொயிட், க்ரீன், ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த Vivo V30 Proவின் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் ரூ.41,999 ஆகவும், 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட் ரூ.46,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments