Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதல்முறையாக புது டெக்னாலஜி கேமரா! – Xiaomi 13 Pro சிறப்பம்சங்கள்!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (12:04 IST)
ஸ்மார்ட்போன் வரவுகளில் உலகம் முழுவதும் நேற்று வெளியான Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பலரை கவர்ந்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்து வரும் ஷாவ்மி நிறுவனம் தற்போது Xiaomi 13 Series ஸ்மார்ட்போனை உலகம் முழுவதும் நேற்று வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்னும் வெளியாகாவிட்டாலும் அதன் சிறப்பம்சங்கள் பலரை ஈர்த்துள்ளது. இந்த Xiaomi 13 Series –ல் Xiaomi 13, Xiaomi 13 Lite, Xiaomi 13 Pro ஆகிய மூன்று மாடல்கள் வெளியாகியுள்ளது. Leica நிறுவனத்தின் பங்களிப்புடன் உயர்தர கேமரா தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளன. அதிகபட்ச சிறப்பம்சங்களை கொண்டதாக Xiaomi 13 ப்ரோ ஸ்மார்ட்போன் உள்ளது.

Xiaomi 13 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2
  • ஆக்டா கோர் சிபியூ, அட்ரினோ 740 ஜிபியூ
  • LTPO OLED டிஸ்ப்ளே, 6.73 இன்ச், 1440 x 3200 பிக்சல்ஸ்
  • 8 ஜிபி/12 ஜிபி ரேம், 128 ஜிபி/256 ஜிபி/512 ஜிபி இண்டர்னல் மெமரி
  • 32 எம்பி முன்பக்க வைட் கேமரா
  • 50.3 எம்.பி வைட் கேமரா, 50 எம்.பி டெலிபோட்டோ கேமாரா, 50 எம்.பி அல்ட்ராவைட் கேமரா
  • ஆண்ட்ராய்டு 13, MIUI 14
  • 4820 mAh Battery, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லஸ் சார்ஜிங்,
  • 5ஜி, யூஎஸ்பி டைப் சி, வைஃபை, ப்ளூடூத், ஃபிங்கர் சென்சார்.

இந்த Xiaomi 13 Pro ஸ்மார்ட்போன் செராமிக் வொயிட் மற்றும் செராமிக் ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும்போது அதிகபட்ச சிறப்பம்சங்கள் கொண்ட மாடலின் விலை ரூ.59,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

இன்று மாலை மற்றும் இரவில் 19 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..!

பிரியங்காவை பார்க்க வந்த கூட்டம், ஓட்டு போட வரவில்லையா? வயநாட்டில் வாக்கு சதவீதம் குறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments