Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்ளோ கம்மி விலையில எப்படி சாத்தியம்? ஆப்பிளுக்கு அதிர்ச்சி தரும் Xiaomi Pad 6!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (08:55 IST)
ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் அதிக விலை கொண்ட வரையும் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட Pad களை வெளியிட்டுள்ள நிலையில் அதே போல சிறப்பம்சங்களுடன் குறைந்த விலையில் தனது புதிய Pad 6 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது ஷாவ்மி.



Pad எனப்படும் டேப்லட் வகைகளில் வரையும் வசதிக் கொண்ட Pad மிகவும் பிரபலமானவை. இந்த எலைட் பேட்களுக்கென தனி எலெக்ட்ரானிக் பென்சில், வயர்லெஸ் கீ போர்ட் உள்ளிட்ட பல வசதிகளும் கிடைக்கின்றன. ஒரு மினி லேப்டாப்பாக, எடிட்டிங் சிஸ்டமாக கூட இந்த பேட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆப்பிள் இவ்வாறான வசதிக் கொண்ட பேட்களை ரூ.75,000 முதலும், சாம்சங் நிறுவனம் ரூ.40,000 முதலும் அறிமுகப்aபடுத்தி உள்ளன. பல்வேறு பயன்பாடுகளை கொண்ட இந்த பேட்கள் கிராபிக் டிசைனர்கள், பொது பயனாளர்கள் இடையே பிரபலமாக இருந்து வருகிறது.



இந்நிலையில் மிகவும் குறைந்த விலையில் சாம்சங், ஆப்பிள் பேட்களுக்கு இணையான சிறப்பம்சங்களுடன் Xiaomi Pad 6 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Xiaomi Pad 6 சிறப்பம்சங்கள்:
  • 11 இன்ச் பில்லியன் கலர் டிஸ்ப்ளே
  • 144Hz ஸ்மூத் ரெஃப்ரெஷ் ரேட்
  • ஸ்னாப்ட்ராகன் 870 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 13, MIUI 14
  • 13 எம்.பி பின்பக்க கேமரா
  • 8 எம்.பி முன்பக்க கேமரா
  • டால்பி அட்மோஸ் குவாட் (4 பக்க) ஸ்பீக்கர்கள்,
  • 8 ஜிபி ரேம் சப்போர்ட்
  • 256 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • இரண்டு நாட்கள் வரை சார்ஜ் நீடிக்கும் சக்தி வாய்ந்த 8840 mAh பேட்டரி,
  • 33W பாஸ்ட் சார்ஜிங்

இந்த Xiaomi Pad 6 ஐ மொபைலுடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும். இந்த Xiaomi Pad 6 ல் HDMI சப்போர்ட் உள்ளது. இதன்மூலம் பேடை கணினியுடன், டிவியுடன் கனெக்ட் செய்து Screen Share செய்ய முடியும். கேம் விளையாட, படம் பார்க்க, வரைய என அனைத்து பயன்பாடுகளுக்கும் ஏற்றவாறு Xiaomi Pad 6 உள்ளது.



இந்த Xiaomi Pad 6 விற்பனை இந்தியாவில் ஜூன் 21ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது 8 ஜிபி + 128 ஜிபி மாடல் Xiaomi Pad 6ன் விலை ரூ.26,999 என்றும், 8 ஜிபி + 256 ஜிபி மாடல் Xiaomi Pad 6ன் விலை ரூ.28,999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Xiaomi Pad 6-க்கான டச் பேனா, வயர்லெஸ் கீ போர்டு, பவுச் ஆகியவை தனியாக விற்பனை செய்யப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை பவள விழா.. முப்பெரும் விழாவில் உங்களை காணக் காத்திருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments