இந்த உலகில் நாம் முன்னேறத்தேவையான ஆயுதமொன்ரு உண்டென்றால் அது உழைப்புதான். அடுத்தவர்களைப் பாதிக்காதவகையில் நமது உழைப்பின் தடங்கள் இருக்குமானால் நமது வெற்றியை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது. எத்தனையோ சவால்களை வென்று இன்று விண்ணதிர சாதனையாளர்களாக நிற்கின்றவர்களின் வாழ்க்கைப் பாடம் நமக்கு என்றும் வழிகாட்டுவது உழைப் பில்லாமல் உயர்வில்லையென்பதுதான்.
உழைப்பதற்கே போதுமான நேரமில்லை என்பவர்களுக்கு தன் சோகரசத்தைக் கூறு மற்றவர்களின் தலைநரைக்க வைக்குமளவு சந்தர்ப்பம் கிடைக்காது. பெரும்மாலும் சண்டைச்சச்சரவுகள் வருவது வீட்டில் இருந்து அக்கம்பக்கத்துப் பற்றி உரண்டிழுப்பவர்களைப் பற்றித்தானே ஒழிய வீடு உண்டு வேலையுண்டு என்றிருப்பவர்களுக்கு இருக்காது.
வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புவோருக்கு வீட்டில் வீட்டுவேலையில் அலுவலகத்தில் கொடுக்கப்படும் வேலையும் சரியாக இருக்கும். ஆனால் இதையும் மீறி அலுவலகத்தில் பிறரது பொறாமைக்கண் பட்டு அது நம் மீதான எரிச்சலை அதிகரித்து நமக்குத் தொல்லை தருவது அதிகரித்தால் நம்மைவிட மேலதிகாரியிடம் இதுகுறித்துப் புகார் அளிப்பது நல்லபயனளிக்கும். அதைவிட்டு பல்லுக்குப் பல் சொல்லுக்குச் சொல் என்று கங்கனம் கட்டிக்கொண்டிருந்தால் நமது பெருமையைத் தாழ்த்திக்கொள்ள வேண்டியதிருக்கும்.
மற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் மதிப்பினைக் குறைக்கவேண்டிய நிலையும் வரநேரிடும்.
ஆனால் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில் அலுவலக நேரம்போக மீதி நேரத்தில் தூங்கிகழிக்காமல், நமக்கு எதில் திறமையுண்டே அதில் நமது பயிற்சியைச் செலுத்தித்திறமையை அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் வீடு, அலுவலகம், தூக்கம்,சாப்பாடு என்ற ஒரு குட்டிச்சுவற்றிற்குள்ளேயே நம் வாழ்க்கை சுறுங்கிவிடும்.
நாம் என்ன ஆகவேண்டுமென்பதை முதலில் நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அடுத்தவர்களைப் பார்த்து ஒவ்வொரு காரியத்தையும் செய்துவந்தால் நமது சுயம் என்பது சாயமிழந்துவிடும்...
காலத்தை அனுஷ்டிக்க தெரிந்த நாம் மற்றவர்களை வம்பிழுக்காமல் எந்தத்தும்பிற்கும் போகாமல் வாழ்க்கையில் எப்படி முன்னேற வேண்டுமென்பதை ஒரு கடிகார முள் கூட நமக்குச் சொல்லித்தரும்! ஒரு கெட முள் வேகத்தடைப்போல் குறுக்கே நின்றாலும், ஒரு நெடுமுள் தெண்டாக சோம்பி விழுந்து பாதையை மறுத்தாலும் தனது உசேன்போல்ட் ஓட்டத்தை அது நிறுத்தாததனால்தான் உலக நேரத்தை அதனால் நிர்ணயிக்க முடிகிறது எனில் நம்மால் முடியாதா என்ன??