Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சில நேரங்களில் ….சிறப்புக் கட்டுரை

சில நேரங்களில் ….சிறப்புக் கட்டுரை
, வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (23:43 IST)
எண்ணம் ஒன்றே அனைத்துமாகும்
 திண்ணம் அதிலே கொள்வோமே
வண்ணம் கொண்ட வாழ்க்கையிலே
ஏற்ற தெல்லாம் நடக்குமென்று
கொண்ட கொள்கை தன்னைவிட்டால்
வந்த பிறப்பு பொய்திடுமே~!
விண்ணும் கூட அழுக்கானால்
 சுத்த மழையில் லாமல்நாம்
மண்ணில் செய்து வீழ்ந்திடுவோம்!
             என்றே நாமின்று இற்றிட்டால்
என்றாலும் பிறர்மேல் பொறமையின்றி
            தென்றல் போல்நாம் அரவணைபோம் ( அறுசீர் விருத்தம்)


என்னளவில் சில  சந்தோஷமான நேரங்களில் முகத்தில்  மகிழ்ச்சியைச் சிதறவிடும் நாம் சில துக்கப்பொழுதுகளில் மாத்திரம்  மகிழ்ச்சியைத் தொலைத்தவர்களைபோல் வருத்தத்தில் மூழ்கிவிடுகிறோம்.

காலத்தினால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இன்று செல்வச்செழிப்பில் வசதியில் வாழ்ந்து பணத்தில் நீச்சலடிப்பவர்கள்  சிலநேரங்கள் இருக்கின்ற சொத்துகளை விற்று ஆண்டியாக திரிவதைப் பார்த்திருப்போம். இன்று பரதேசியாய்த் திரிபவர்கள் சிலநேரங்களில் பளபளக்கும் நகைகளைக் கைகளில்போட்டு, பந்தாவாகக் காரில் டாட்டா போட்டுக்கொண்டு செல்பவர்களை நாம் சந்தித்திருப்போம்.

இதற்காக இருந்த செல்வத்தை இழந்தவர்கள் அனைவரும் தெண்டியாச் செலவு செய்து தெருவுக்கு வந்தவர்கள்; ஏழையாக இருந்து ஒன்று மச்சுமாளிகை கட்டி சுகபோகமாகச் செட்டில் ஆனவர்கள் உழைக்காமலே என்னைப்பார் யோகம் வரும் என்ற ரீதியில் அதிர்ஷ்டத்தால் மட்டும் முன்னுக்குவரவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த ஒற்றை வாழ்க்கையில்தான் நாம் எத்தனை மக்களைச் சந்திக்கிறோம். இந்தியாவில் மிகப்பெரிய தொழிலதிபர் அமரர் அம்பானியின் ஒரு புதல்வர்கள் பற்றி உலகத்திற்கே தெரியும். தந்தையில் மரணத்திற்குப் பின் ரிலையன்ஸ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது. இதில் முகேஷ் அம்மானி இன்றும் கூட வெற்றிகரமான தொழிலதிபராகப் பிரசித்துபெற்று இந்தியாவைத் தன் ஜியோ நெட்வொர்க்கால் கட்டிபோட்டுவைத்திருக்கிறார். இதுதவிர ரிலையன்ஸ் பெட்ரொல் உள்ளிட்ட எத்தனையோ தொழில்துறைகளில் அவர் இன்று சக்கரவர்த்தியாகவுள்ளார். ஆனால அவரது சகோதர் அனில் அம்பானி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டும் கடனைக் கட்ட கடைசியில் தன் சொந்தச் சகோதரரே உதவிபுரிய வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார்.

அண்ணன் முகேஷ் அம்பானி தொழிலில் சகல நுட்பங்களையும் கையாண்டு குஜராத் மாநிலத்தில் உலகில் மிகப்பெரிய ஸ்டேடியத்திற்கு அம்பானி முனை என்று பெயரிடுமளவிற்குப் பிரசித்திபெற்றிருக்கிறார்… அண்டில்லா என்ற உலகில் விலைமதிப்புமிக்க இல்லத்தைச் சில ஆண்டுகளுக்கு முன் கட்டி உலகையே வியப்பில் ஆழ்த்தி தன் குடும்பத்தினருடன் சொகுசாக வசித்துவருகிறார். இதற்கு அவரது கடின உழைப்பு மற்றும் திறமையும் ஒருகாரணம்…

ஆனால் தந்தைவழி வந்த சொத்துகளையும் தன் உழைப்பில் ஈட்டிய சொத்துகளையும் சில எதிர்ப்பாராத நிகழ்வுகளால் போட்டி நிறைந்த உலகில் அவற்றை எதிர்கொள்ள முடியாமல் இருந்ததையெல்லாம் இழந்து கடனாளி ஆனார் அனில் அம்பானி.

இன்று உலகத்தில் உள்ள மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா. இதற்கு இணையாக அமெரிக்காவில் தனக்கெரிய ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவன நடத்தி அதன்மூலம் மற்றநாடுகளின் செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்லும் தொழிலதிபர் எலான் மஸ்க், ஒரு ஏழைக்குடும்பத்துப் பையன். இன்று உலகக் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருக்கிறார். இத்தனைக்கும் அவரது  வாரத்திற்கு 72மணிநேரக் கடினமான உழைப்பு தொழிலாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் அவர்களிடன் தான் வேலைவாங்கும் அணுகுமுறையே காரணம்.

சினோஜ்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேமல் பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகைகளும் பலன்களும்...!!