Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலுக்கு வந்த நடிகை மீது பாலியல் விமர்சனம்: பிரச்சார மேடையில் சர்ச்சை!

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (09:17 IST)
உத்திர பிரதேச மாநில சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆசம் கான், தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகையும் பாஜக வேட்பாளருமான ஜெயப்பிரதாவை பாலியல் ரீதியாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவுடன் ஆசம்கான் ராம்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். இங்குதான் ஜெயபிரதாவை பாலியல் ரீதியாக விமர்சித்தார். மேலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் பெண்களையும் அவமானப்படுத்தும் வகையில் இருந்தது. இவரின் இந்த விமர்சனத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. 
இதற்காக, தேசிய மகளிர் ஆணையம் ஆசம் கானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஜக தலைவர் அமித் ஷா, யோகி ஆதித்யநாத், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதோடு ஆசம்கான் மீது இந்த சம்பவத்தால் 9 வழக்குகள் பதிவாகி உள்ளன. 
 
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆசம் கான் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதவாது, ஜெயப்பிரதாவை விரல் பிடித்து அழைத்து சென்று ராம்பூர் தெருக்களில் அறிமுகப்படுத்தியதே நான்தான். என் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவேன் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்