வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலுக்கு விளக்கமளித்து தேர்தல் ஆணையம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதை அடுத்து தேர்தலை ரத்து செய்யும் முயற்சிகள் நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகின.
சோதனைகள் நடைபெற்ற போதே வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என சந்தேகங்கள் எழுந்தன. இப்போது தேர்தலை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தேசிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன.
மேலும், தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை ரத்து செய்வதற்க்கான பரிந்துரையை குடியரசு தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், ஊடகங்களில் வெளியான தகவல்களை மறுத்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், வேலூரில் தேர்தலை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது.