Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாம் கட்ட தேர்தல் நிறைவு – 66 சதவீத வாக்குப்பதிவு !

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (08:56 IST)
மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் 66 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று மூன்றாவது கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கேரளா, குஜராத், அசாம், உத்தரபிரதேசம்  உள்ளிட்ட 117 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளும் அடக்கம்.

நேற்றைய வாக்குப்பதிவு முடிவில் கிட்டதட்ட 66 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல் கட்ட தேர்தலில் 69.45 விழுக்காடு வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 69.43 வாக்குகளும் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு கட்டங்களை ஒப்பிடுகையில் நேற்றைய வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. இதுவரை மொத்தம் 302 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம் :-
அசாம் - 80.75%
பிகார் - 59.97%
சத்தீஸ்கர் - 68.41%
தாத்ரா நகர் & ஹாவேலி - 79.59%
டாமன் & டையூ - 71.82%
கோவா - 74.03%
குஜராத் - 63.71%
ஜம்மு காஷ்மீர் - 12.86%
கேரளா - 76.35%
கர்நாடகம் - 67.72%
மகாராஷ்டிரம் - 59.74%
ஒடிசா - 62.49%
திரிபுரா - 79.92%
உத்தரப் பிரதேசம் - 61.40%
மேற்கு வங்கம் - 80.25%

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments