Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ரெடி... நீங்க ரெடியா? அன்புமணிக்கு எதிர்சவால் விடுத்த உதயநிதி!!

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (15:53 IST)
அன்புமணியுடன் விவாதிக்க தாம் தயார் அவர் தயாரா என் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 
வரும் மக்களவை தேர்தலில் முதல்முறையாக திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி களமிறங்கியுள்ளார். முதல்வர், துணை முதல்வர், மோடி என அனனவரையும் காரசாரமாக அவர் தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சனம் செய்து வருகிறார்.
 
அதிலும் குறிப்பாக அன்புமணியை கண்டமேனிக்கு விமர்சித்து வருகிறார். இதனால் கடுப்பான அன்புமணி உதயநிதி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார் என கூறினார்.
 
அவருக்கு தைரியம் இருந்தால் தமிழக திட்டங்கள் குறித்து என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என கேட்டிருந்தார்.
 
இந்நிலையில் விருதுநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி பேசுகையில், முதல்வரை டயர் நக்கி என்றெல்லாம் கூறிய அவர் தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளார். நான் உண்மையை தானே பேசினேன். ஏன் அன்புமணிக்கு கோபம் வருகிறது. அன்புமணியிடம் விவாதம் செய்ய நான் தயார், அவர் தயாரா என உதயநிதி பதில் கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments