Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை செயலாளருக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (21:04 IST)
தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இன்று நாகர்கோவில் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி மறைந்தபோது தன்னுடைய தன்மானத்தை விட்டு அவருக்காக அண்ணா சமாதியில் ஆறடி நிலம் கேட்டதாகவும், ஆனால் அதைக்கூட கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
 
எடப்பாடி பழனிச்சாமி மட்டுமின்றி தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் இடம் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், திமுக ஆட்சி மாறும்போதும் கிரிஜா தலைமைச்செயலாளராக இருப்பார் என்றும் கூறினார். அதன்பின் சிறிது நேரம் பேச்சை நிறுத்திய மு.க.ஸ்டாலின், அவரை நான் பழிவாங்குவேன் என்ற அர்த்தத்தில் கூறவில்லை, அப்போது அவர் உண்மையை உணர்வார் என்று கூறினார். மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு கரகோஷம் விண்ணை பிளந்தது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

ஹைதராபாத் தீ விபத்தில் 17 பேர் பலி: பலியானவர்களுக்கு 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர்

துருக்கியுடன் ஒப்பந்தத்தை முறித்த மும்பை ஐஐடி - பரபரப்பு தகவல்!

நயினார் நாகேந்திரனை சந்தித்த 2 போலீசார் பணிமாற்றம்.. அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments