Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னம் சின்னதாகவும் மங்கலாகவும் இருக்கிறது – நீதிமன்றம் செல்லும் சீமான் !

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (10:37 IST)
நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயியின் சின்னம் சிறியதாகவும் மங்கலாகவும் உள்ளதாக கூறிய சீமான் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளார்களுக்காக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது நாகை மாவட்டத்தில் முகாமிட்டுள்ள சீமான் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக பரப்புரை செய்து வருகிறார்.

திமுக, அதிமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பாஜக என அனைத்துக் கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துவருகிறார். அந்த வரிசையில் இப்போது தேர்தல் ஆணையமும் சேர்ந்துள்ளது. பிரச்சாரத்தின் போது ‘வாக்குச்செலுத்தும் இயந்திரத்தில் அனைத்து சின்னங்களும் பளிச்சென இருக்கின்றன, ஆனால் நம் சின்னம் மட்டும் மங்கலாகவும் சின்னதாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு அந்த இடத்தைக் காலியாக அப்படியே விட்டிருக்கலாமே’ என ஆவேசமாகப் பேசினார்.

இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னத்தைத் தெளிவாகப் பதியக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments