Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்களித்த கையோடு விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை என்ன?

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (12:31 IST)
சென்னை கோடம்பாக்கத்தில் வாக்களித்த விஜய்சேதுபதி நல்லது நடைபெற காத்திருக்கிறேன் என கூறினார். 
 
தமிழகம், புதுவை உள்பட 97 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் விஐபிக்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதால் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஏராளமான வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறாகியுள்ளதால் பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில்  30.62 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கோடம்பாக்கத்தில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். முதல் முறை வாக்களிப்பவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என கூறினார். மக்கள் அனைவருக்கும் இன்றைய அரசியல் சூழ்நிலை நன்றான தெரிகிறது. நல்லது நடக்கும் என்று நம்பிக்கையோடு இருப்பதாக அவர் கூறினார். அனைவரும்  தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைசூர் பாக்ல கூட ‘PAK’ வரக்கூடாது! மைசூர் ஸ்ரீ என பெயர் மாற்றிய ஸ்வீட் கடைகள்!

8 மாவட்டங்களுக்கு காத்திருக்குது கனமழை! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments