Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன பாத்து வேணா.. என் கண்ண பாத்து ஓட்டு போடுங்க: அதிமுக அமைச்சரின் அலப்பறைகள்!!!!

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (10:54 IST)
மக்களுக்காக உழைத்து கருத்து போன என்னையும் தூங்காத என் கண்களையும் பார்த்து ஓட்டு போடுங்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
 
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சிகளின் ஊழல்களை ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினரின் ஊழல்களை எதிர்கட்சிகளும் சொல்லி மாறி மாறி குறை கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை போட்டியிடும் கரூர் தொகுதியில் அவருக்கு ஆதரவாக அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களிடையே பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் மக்களுக்காக உழைத்து கருத்து போன என்னையும் தூங்காத என் கண்களையும் பார்த்து அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என மக்களிடேயே பேசினார்.

ஒரு பக்கம் என்னன்னா தம்பிதுரை ஓட்டு போட்டா போடுங்க போடாட்டி போங்கன்னு சொல்றாரு, அவரது ஆதரவாளர்கள் மக்களை தகாத வார்த்தையால் திட்றாங்க. மறுபக்கம் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு இந்த அமைச்சர் சொல்றாரு, தேர்தல் நெருங்குவதும் போதும் இந்த டிராமாக்களும் போதும் என மக்கள் புலம்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments