Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப. சிதம்பரம், நளினி சிதம்பரம் பணத்திற்காக எதுவும் செய்வார்கள் - எச்.ராசா

Webdunia
ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (14:06 IST)
அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு களப்பணியாற்றி வருகின்றனர்.  அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் பாஜக உள்பட பல முக்கிய கட்சிகள் இணைந்துள்ளனர்.
அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா.
 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
பல ஆண்டுகளாக பட்டியல் சமுதாய மக்களின் பிரச்சனைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறேன்.  நான் போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் பட்டியல் இன மக்களுடன் அன்புடன் பழகிவருகிறேன்.
 
நீட் தேர்வில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேஷம் போடுகிறது. மேலும் ப. சிதம்பரம், நளினி சிதம்பரம் பணத்திற்க்காக எதுவும் செய்வார்கள். நான் ஆதாரத்தின் அடிப்படையில்தான் பேசுகிறேன். ப. சிதம்பரம்  பொய்யுரைப்பவர். 
 
மோடி பிரதமரானால் நூறுநாள் வாய்ப்பு திட்டம் இல்லாமல் செய்து விடுவார் என்று ப. சிதம்பரம் கூறினார்.எனவே ப.சிதம்பரம் குடும்பத்துடன் மன்னிப்புக் கேட்க வேண்டும். கோர்ட்டில் 18 முறை முன் ஜாமீன் கேட்டு வருபவர்  சிதம்பரம்இந்நிலையில் அவர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு  வாக்கு சேகரிக்கிறார் என்பதை மக்களுக்கு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments