Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை..!!

Senthil Velan
செவ்வாய், 19 மார்ச் 2024 (12:25 IST)
மக்களவை தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நாளை காணொளி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வலுவான கூட்டணியாக திமுக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது. இக்கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டது. அடுத்த கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில்திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்  நாளை நண்பகல் 12 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: பிரதமர் மோடி வருகை எதிரொலி.! சென்னை - சேலம் விமான சேவை ரத்து..!!
 
மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் திமுக தேர்தல் அறிக்கை, தேர்தல் பரப்புரை, தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், திமுகவின் மூன்றாண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிப்பது போன்றவற்றை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments