மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..! கச்சத்தீவு மீட்பது உள்ளிட்ட 74 வாக்குறுதிகள்..!!

Senthil Velan
சனி, 6 ஏப்ரல் 2024 (11:33 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. 
 
திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிட்டுள்ளார்.  இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை  திருச்சி தேர்தல் பணிமனை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.
 
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கூடங்குளம் அணுமின் நிலையம் மூடல் உள்ளிட்ட 74 வாக்குறுதிகளை வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திராவிட மாடல் அரசை இந்தியாவிற்கே முன்மாதிரியாக எடுத்துச் செல்கிறார் என தெரிவித்தார்.

ALSO READ: ஏடி.எம்.ஐ உடைத்து 10 லட்சம் கொள்ளை.! மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
 
திருச்சி தொகுதியில் மதிமுக வெற்றிக்காக பணியாற்றி வரும் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவுன் சந்திப்பு ஏன்?.. ஓப்பனாக சொல்லிட்டாரே ஓபிஎஸ்!...

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments