Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெண்டைக்காய் மசாலா செய்வது எப்படி?

Sugapriya Prakash
செவ்வாய், 9 ஜனவரி 2024 (14:10 IST)
ஈஸியான நிமிடங்களில் செய்யக்கூடிய வெண்டைக்காய் மசாலா செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்…


தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிலோ, நறுக்கிய வெங்காயம் – 1, நறுக்கிய தக்காளி – 1, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, தயிர் - 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, கடுகு, உலுந்து - 1 தேக்கரண்டி, சீரகம்

செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உலுந்து சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின் தக்காளியை சேர்த்து 2 முதல் 3 நிமிடம் வதக்கவும். பின்னர் சாம்பார் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து இதில் வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெண்டைக்காய் சற்றும் சுண்டு வந்ததும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

தொடர்ந்து கிளறி 5 நிமிடங்கள் சமைக்கவும். இப்போது 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரை தெளித்து நன்கு கலக்கவும். பின்னர் மற்றொரு 3 முதல் 4 நிமிடங்கள் சமைக்கவும்.

வெண்டைக்காய் பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லியை தூவி இறக்கினால் வெண்டைக்காய் மசாலா ரெடி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை – சென்னை அறிமுகம் செய்யும் ரீலெக்ஸ் ஸ்மைல் புரோ: கிட்டப்பார்வைக்கு மேம்பட்ட சிகிச்சை செயல்முறை!

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன பழங்கள் சாப்பிடக்கூடாது?

எண்ணெய் பலகாரங்கள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்..!

தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. கடுகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments