Publish Date: Mon, 18 Oct 2021 (10:30 IST)
Updated Date: Mon, 18 Oct 2021 (11:28 IST)
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை திடீரென அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
புரட்டாசி மாதத்துடன் தசரா பண்டிகையும் இணைந்துள்ளதால் முட்டை கொள்முதல் விலை குறைந்தது. மேலும் கோழி உயிருடன் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் நாமக்கல்லில் முட்டை விலை திடீரென அதிகரித்துள்ளது.
அம், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.25 லிருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.4.35 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் முடிந்துள்ள நிலையில் மக்கள் அசைவ உணவுகளை வாங்க துவங்கியுள்ளதால் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது.