Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65000ஐ நெருங்கியது..!

Gold
Siva
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (10:33 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருவதை பார்த்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 80 ரூபாயும் ஒரு சவரனுக்கு 640 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் விலை 64 ஆயிரத்தை தாண்டி 65 ஆயிரத்தை நெருங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 80 ரூபாய் உயர்ந்து   8,060 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 640 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   64,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,792 எனவும் ஒரு சவரன் ரூபாய் 70,336 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

இனி வெயில் இல்லை, இடி மின்னலுடன் மழை தான்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி.. இஸ்ரோ அதிர்ச்சி அறிவிப்பு..!

வங்கதேசத்துடன் வணிகத்தை குறைக்கிறது இந்தியா.. $700 மில்லியன் ஏற்றுமதி பாதிப்பா?

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர்.. மும்பையில் 250 பேர், ஹரியானாவில் 237 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments