Publish Date: Thu, 02 Feb 2023 (16:54 IST)
Updated Date: Thu, 02 Feb 2023 (16:58 IST)
திடீரென தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 44,040க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது. நேற்று சுங்க வரிகளை அதிகரித்து பட்ஜெட் தாக்கல் செய்யபட்ட நிலையில் இன்று இந்த வரலாறு காணாத விலையேற்றம் மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.