Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக ஏற்றம் காணும் பங்குச்சந்தை.. இன்றே 80 ஆயிரத்தை தாண்டுமா சென்செக்ஸ்?

Siva
செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (09:45 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஆட்டம் கண்ட நிலையில், சமீபகாலமாகத்தான் பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பங்குச்சந்தை  நல்ல முன்னேற்றம் கண்டது என்பதும், சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச் சந்தை உயர்ந்திருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், 200 புள்ளிகள் உயர்ந்து 79,610 என வர்த்தகம் ஆகி வருகிறது. அனேகமாக இன்றே 80 ஆயிரத்தை தொட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 24,034 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி,  ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், டெக் மகேந்திரா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வருகிறது.

அதே போல், டிசிஎஸ், சன் பார்மா, மாருதி, இண்டஸ் இண்ட் வங்கி, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்சிஎல் டெக்னாலஜி, ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments