Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. ஆனால் ஒரு நல்ல விஷயம்.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
வியாழன், 17 ஜூலை 2025 (09:41 IST)
இந்தியப் பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. திங்கள், புதன் ஆகிய நாட்கள் ஏற்றத்திலும், செவ்வாய்க்கிழமை சரிவிலும் இருந்த நிலையில், இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ஒரு நல்ல விஷயமாக, பெரிய அளவில் சரியாமல், மிகவும் குறைந்த அளவு மட்டுமே சரிந்துள்ளதால், மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 84 புள்ளிகள் சரிந்து 82,555 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 22 புள்ளிகள் மட்டுமே சரிந்து 25,181 என்ற புள்ளிகளில் உள்ளது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், பாரதி ஏர்டெல், சிப்லா, கோல் இந்தியா, ஹெச்.சி.எல். டெக்னாலஜி, எச்.டி.எஃப்.சி. வங்கி, ஜியோ பைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, எல் அண்ட் டி,  ஸ்ரீராம் பைனான்ஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டி.சி.எஸ். உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
ஆனால், அதே நேரத்தில் ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், டாக்டர் ரெட்டிஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., மாருதி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை நாகப்பட்டிணம் செல்லும் விஜய்! பிரச்சார இடம் திடீர் மாற்றம்!?

உங்கள் குறைகளை முதலமைச்சரிடம் சொல்லுங்கள்.. என்னிடம் சொல்ல வேண்டாம்: மக்களிடம் சுரேஷ்கோபி

குடிநீரில் நச்சு கலந்து 6 பேர் பலி.. திமுக, அதிமுக இணைந்து போராட்டம்..!

ஷேக் ஹசீனா இனி தேர்தலில் வாக்களிக்க முடியாது: வங்கதேச தேர்தல் ஆணையம் தகவல்..!

தமிழகத்தில் தேர்தல் வருவதால் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுமா? அமைச்சர் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments