Publish Date: Wed, 25 Aug 2021 (12:02 IST)
Updated Date: Wed, 25 Aug 2021 (13:30 IST)
மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது.
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் பங்கு வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் இருந்துவரும் சென்செக்ஸ் 56,200 என்ற புதிய உச்சத்தை நெருங்கியது. தற்போது சென்செக்ஸ் 124.13 புள்ளிகள் அதிகரித்து, 56,083.11 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 45.70 புள்ளிகள் அதிகரித்து, 16,670.30 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.