Publish Date: Fri, 08 Oct 2021 (10:52 IST)
Updated Date: Fri, 08 Oct 2021 (10:53 IST)
மும்பை பங்குச்சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் இரண்டாவது முறையாக 60,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் ஆகி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் நேற்று மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. ஆம், சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 60,285 புள்ளிகளில் வர்த்தகமானது.
இதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகள் அதிகரித்து 60,000 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94 புள்ளிகள் அதிகரித்து 17,884 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.