பலித்த கணிப்பு... உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (17:28 IST)
கணிப்பின் போல மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 257 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது. 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில வாரங்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் 60 ஆயிரத்துக்கும் மேல் சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென 700 புள்ளிகள் சரிந்த நிலையில் நேற்றும் 400 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறைந்ததால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர் . 
இந்நிலையில் இந்த வாரத்தின் இரண்டாவது நாளாக இன்றும் சென்செக்ஸ் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 55 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 720 என்ற புள்ளிகளில் வர்த்தமானது . அதேபோல் தேசிய பங்குச்சந்தை 5 புள்ளிகள் குறைந்து 17 ஆயிரத்து 480 என்ற புள்ளியில் வர்த்தகமானது. 
 
இன்றைய பங்குச்சந்தை மாலைக்கு மேல் ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். கணிப்பின் போல மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 257 புள்ளிகள் உயர்ந்து 59,031 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 86 புள்ளிகள் உயர்ந்து 17,577 புள்ளிகளில் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜூலை 15-ல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: எவ வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுகவின் 59 இடங்கள் வெற்றிக்கு விசிகதான் காரணம்: திருமாவளவன் அதிரடி பேச்சு

தனியார் பள்ளிகளை மிரட்டி ரூ.200 கோடி மோசடி: திமுக பிரமுகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நாளை கரூரில் முதல்வர் விஜய்!. என்னென்ன ஏற்பாடுகள்?.. வாங்க பார்ப்போம்!..

முதல்வரின் டேபிளில் தூங்கும் விசிகவின் 2 கோரிக்கைகள்!. அப்செட்டில் வன்னி அரசு!...

அடுத்த கட்டுரையில்
Show comments