Publish Date: Mon, 19 Dec 2022 (10:01 IST)
Updated Date: Mon, 19 Dec 2022 (10:03 IST)
பங்கு சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் நான்கு நாட்கள் பங்குச்சந்தை சரிந்தது என்பதும் இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தை சற்று உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை அடைந்துள்ளனர். பங்குச் சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்ந்து 61498 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 18322 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் முழுவதுமே பங்குசந்தை பாசிட்டிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது