Publish Date: Mon, 14 Nov 2022 (09:23 IST)
Updated Date: Mon, 14 Nov 2022 (09:25 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்றைய பங்கு சந்தை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
பங்குச் சந்தை கடந்த வெள்ளிக்கிழமை உச்சத்தில் சென்ற நிலையில் இன்று பங்குச்சந்தை கிட்டத்தட்ட ஏற்றமும் இறக்கமும் இன்றி சமநிலையில் உள்ளது
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 25 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 60 ஆயிரத்து 820 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 374 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது
இருப்பினும் இன்றைய பங்கு சந்தை வீழ்ச்சி அடையாமல் ஓரளவு உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலைக்குள் இன்னும் கொஞ்சம் உயரும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.