கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்து கொண்டே வருகிறது என்பதையும் 63,000 என இருந்த சென்செக்ஸ் தற்போது 59 ஆயிரம் என்ற நிலைக்கு குறைந்து 4000 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை பங்கு சந்தை சரிவில் தொடங்கிய நிலையில் தற்போது சென்செக்ஸ் 75 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 215 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிமிடம் 25 புள்ளிகள் சார்ந்து 17,365 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் அதை எடுத்து தங்கத்தை வாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.