Publish Date: Tue, 22 Nov 2022 (09:10 IST)
Updated Date: Tue, 22 Nov 2022 (09:11 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாளிலேயே சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிபிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வாரத்தில் இன்று 2-வது நாளாக மீண்டும் சென்செக்ஸ் சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சுமார் 20 புள்ளிகள் வரை குறைந்தது 61 ஆயிரத்து 126 என்ற புள்ளிகளில் தற்போது விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 19 புள்ளிகள் உயர்ந்து 18180 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த இரண்டு நாட்களாக குறைந்தாலும் 61 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பதால் இன்னும் வலுவாக தான் உள்ளது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.