இந்தியா பாகிஸ்தான் போர் பதட்டம் நீங்கியதை அடுத்து நேற்று பங்குச்சந்தை எழுச்சி பெற்றது என்பதும் 2800க்கும் அதிகமான புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மிகப்பெரிய லாபம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மிகப்பெரிய அளவில் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீரென சரிந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 475 புள்ளிகள் சரிந்து 81955 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதை போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 108 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 817 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹீரோ மோட்டார்ஸ், இண்டஸ் இண்ட் வாங்கி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாட்டா ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல் மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், எச்டிஎப்சி வங்கி, எச்சிஎல் டெக்னாலஜி, பாரதி ஏர்டெல், ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.