Publish Date: Fri, 12 Jan 2024 (15:59 IST)
Updated Date: Fri, 12 Jan 2024 (16:34 IST)
மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண், வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகமானது
இந்த வாரத்தில் பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று திடீரென சென்செக்ஸ் 999.78 புள்ளிகள் உயர்ந்து 72,720.96 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 281.05 புள்ளிகள் இருந்து 21.928.25 புள்ளிகளில் வர்த்தகமானது.
இதனால் சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் 4.3 சதவீதமும், இன்ஃபோசிஸ் 7 சதவீதமும் உயர்ந்தன. இந்த உயர்வு தகவல் தொழில்நுட்ப குறியீட்டை 5 சதவீதம் அதிகமாக உயர்த்தியுள்ளது.