Publish Date: Wed, 09 Nov 2022 (09:47 IST)
Updated Date: Wed, 09 Nov 2022 (09:48 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த போதிலும் இன்று ஒரே நாளில் ஒரு கிராம் ஒன்றுக்கு 57 ரூபாயும் ஒரு சவரனுக்கு 456 ரூபாயும் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.யை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 57 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4815.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 456 உயர்ந்து ரூபாய் 38520.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5217.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41736.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூபாய் 67.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 67400.00 எனவும் விற்பனையாகி வருகிறது