Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 24 May 2025
webdunia

4 நாட்களாக ஒரே விலையில் விற்பனையாகும் தங்கம்.. என்ன காரணம்?

Advertiesment
சென்னை
, செவ்வாய், 16 மே 2023 (09:56 IST)
சென்னையில் தங்கம் விலை மே 13ஆம் தேதியிலிருந்து நான்கு நாட்களாக தொடர்ச்சியாக ஏற்ற இறக்கமின்றி ஒரு கிராம் ரூ.5715 என்ற ஒரே விலையில் விற்பனை ஆக்கி வருகிறது. இது குறித்து நகை கடைக்காரர்கள் கூறிய போது நான்கு நாட்களாக தொடர்ச்சியாக தங்கம் விலை மாற்றம் இன்றி விற்பனை ஆவது தங்களுக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 5715.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 45720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6184.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49472.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 30 காசுகள் உயர்ந்து  ரூபாய் 78.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லைகாவின் சென்னை அலுவலகத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை..!