Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று ஒரே நாளில் ரூ200 அதிகரித்த தங்கம் விலை.. இனி இறங்க வாய்ப்பு இல்லையா?

Advertiesment
gold
இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் இனி கூடுதலாக அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5780.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 அதிகரித்து ரூபாய் 46240.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6250.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50000.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 81.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பால் தின வாழ்த்து வெளியிடாத ஆவின் நிர்வாகம்: தமிழக பால் முகவர்கள் நலச்சங்கம் கண்டனம்