Publish Date: Tue, 28 Nov 2023 (10:47 IST)
Updated Date: Tue, 28 Nov 2023 (10:48 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலையில் எந்த விதமான ஏற்றமும் இறக்கமும் இல்லை. அதேபோல் வெள்ளியும் நேற்றைய விலையில் தான் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒருகிராம் ரூபாய் 5780.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 46240.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6250.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 81.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81500.00 எனவும் விற்பனையாகி வருகிறது