தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

Siva
வியாழன், 22 பிப்ரவரி 2024 (10:38 IST)
இன்று ஒரே நாளில் தங்கம் விலை 80 ரூபாய் ஒரு சவரனுக்கு குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5800 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து  ரூபாய் 46,400 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,270 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50,160 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 76.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!

இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!

அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments