Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு சவரன் ரூ.50,000க்கு வந்துவிட்ட தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

Siva
புதன், 7 ஆகஸ்ட் 2024 (11:49 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சமீப காலமாக தங்கம் விலை மிகப் பெரிய அளவில் சரிந்து வருகிறது என்பதும் குறிப்பாக பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைப்பு நடவடிக்கைக்கு பின் அதிகளவு குறைந்தது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
கடந்த சில வாரங்களுக்கு முன் 55 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்த ஒரு சவரன் தங்கம் தற்போது 50 ஆயிரத்துக்கு வந்துவிட்டதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்தவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ரூபாய்   6,330 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 560 குறைந்து  ரூபாய் 50,640 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,785 எனவும் ஒரு சவரன் ரூபாய் 54,280 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 87.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 87,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

45 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. பிறப்பு உறுப்பில் இரும்புக்கம்பிகள்..!

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ரூ.4500 கோடி இழப்பு.. இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments