Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் சரிந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

Siva
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (09:58 IST)
கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏற்றத்திலும் சமநிலையிலும் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய்   6,660 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து  ரூபாய் 53,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,115 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,920 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 92.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  92,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் அவர் வேலையை பார்க்கட்டும், நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்: சீமான்

பெண் மருத்துவரின் பெயர் புகைப்படம் நீக்கம்.! உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய விக்கிப்பீடியா.!!

மூக்கறுபட்டவர்களின் கூச்சல், கூக்குரல், புலம்பல்.! பாஜகவினருக்கு திருமாவளவன் பதிலடி..!!

ராகுலின் பாதுகாப்பை பலப்படுத்துக.! மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments