Publish Date: Tue, 20 Dec 2022 (09:46 IST)
Updated Date: Tue, 20 Dec 2022 (09:47 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்குச்சந்தை உயர்வு காரணமாக முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை தொடக்கத்திலேயே சுமார் 600 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் சுமார் 570 புள்ளிகள் வரை சரிந்து 61 ஆயிரத்து 257 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 170 புள்ளிகள் சரிந்து 18250 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய தினம் பங்குச் சந்தை சரிவில் தான் இருக்கும் என்றும் இதை பயன்படுத்தி முதலீட்டாளர்கள் கூடுதலாக முதலீடு செய்யலாம் என்றும் பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்