பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாளிலேயே சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பங்குச்சந்தை தேர்தல் முடிந்து ரிசல்ட் வரும் வரை நிதானமாகவே இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று திடீரென சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை சென்செக்ஸ் கிட்டத்தட்ட 100 புள்ளிகள் உயர்ந்து 73 ஆயிரத்து 749 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பபங்குச்சந்தை நிப்டி 34 புள்ளிகள் உயர்ந்து 22371 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடி பீஸ், ஐடிசி, கல்யாண் ஜுவல்லர்ஸ், நாட்கோ பார்மா, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது