Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடந்த வாரம் முழுவதும் சரிந்த பங்குச்சந்தை.. இன்றும் பாசிட்டிவ் இல்லாத நிப்டி, சென்செக்ஸ்..!

Siva
திங்கள், 28 அக்டோபர் 2024 (09:49 IST)
கடந்த வாரம் முழுவதும் பங்குச் சந்தை சரிவிலேயே இருந்த நிலையில், இந்த வாரமாவது உயரும் என்று எதிர்பார்த்த நிலையிலும் இந்த வாரமமும் பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நிப்டி பாசிடிவ் இல்லை என்பது ஓபனிங் வர்த்தகத்திலிருந்து தெரிகிறது.
 
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 200 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் அதிகரித்திருந்தாலும், படிப்படியாக குறைந்து தற்போது வெறும் 30 புள்ளிகள் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில் காணப்படுகிறது. இன்னும் சில நிமிடங்களில் அதுவும் குறைந்து மைனஸாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் வெறும் 30 புள்ளிகள் உயர்ந்து 79,450 என்ற புள்ளியில் வர்த்தகமாக உள்ளது. அதே போல், தேசிய பங்குச் சந்தையாளர் நிப்டி 25 புள்ளிகள் குறைந்து 24,100 என்று வர்த்தகமாகி வருகிறது. இன்றும் பங்குச் சந்தையில் பெரிய ஏற்றம் இருக்காது என்பதால் முதலீட்டாளர்களின் நஷ்டம் தொடர்கிறது என்பதும் பரிதாபமாக உள்ளது.
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் வங்கி போன்ற பங்குகள் உயர்ந்துள்ளதுடன், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
பங்குச் சந்தை இன்னும் சில நாட்களுக்கு நெகட்டிவ்வாக இருக்கும் என்றும், குறிப்பாக இஸ்ரேல் மற்றும் ஈரான் போரின் முடிவுக்கு பிறகே பங்குச் சந்தை உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டம்.. அன்புமணி உள்பட பலர் ஆப்செண்ட்?? - ராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

2026 மட்டுமல்ல.. 2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!

இனி வெப்ப அலை இல்லை.. வரும் நாட்களில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

அமமுக துணை பொதுச்செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தஞ்சையில் பரபரப்பு..!

10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments