Publish Date: Thu, 04 Jan 2024 (11:03 IST)
Updated Date: Thu, 04 Jan 2024 (11:05 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் இந்த வாரம் சரிவில் இருந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதை பார்த்தோம்.
ஆனால் நேற்று சிறிய அளவில் பங்கு சந்தை உயர்ந்த நிலையில் இன்று திடீரென 400 புள்ளிகளுக்கு மேல் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 450 புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 810 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி125 புள்ளிகள் உயர்ந்த 21,643 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
பங்குச்சந்தை ஓரிரு நாட்கள் சரிந்தாலும் மீண்டும் ஏற்றத்தில் வந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது