Publish Date: Fri, 29 Dec 2023 (10:03 IST)
Updated Date: Fri, 29 Dec 2023 (10:06 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த நிலையில் வாரத்தின் கடைசி நாளான இன்று சிறிய அளவில் பங்குச்சந்தை சரிந்துள்ளது.
பங்குச்சந்தை இன்று காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 160 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்துள்ளது. இதனை அடுத்து சென்செக்ஸ் தற்போது 72259 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 42 புள்ளிகள் குறைந்து 21 ஆயிரத்து 735 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று சிறிய அளவில் குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் எந்தவித பரபரப்பும் இல்லை.
அதுமட்டுமின்றி மீண்டும் வரும் திங்கட்கிழமை முதல் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்