Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva
திங்கள், 4 மார்ச் 2024 (10:52 IST)
கடந்த வாரம் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்தாலும் கடந்த வெள்ளிக்கிழமை ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்தது என்பதும் அதனால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளும் பங்குச் சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 73,898 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 22,4 08 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இருந்தாலும் இனி வரும் நாட்களில் கவனமாக முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர் 
 
இன்று ஏபிசி கேப்பிடல்,  பேங்க் பீஸ், கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் சிப்லா, ஐடி பீஸ், ஐடிசி, கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments